ஈழத்து இலக்கியத்தின் முன்னோடி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரின் நினைவுப் பேருரை எதிர்வரும் 30ம் திகதி, கொழும்பு 09, வை.எம்.எம் .ஏ. கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
‘மலையக வரலாறும் ஈழத்து இலக்கியமும்’ என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு கவிஞரும் எழுத்தாளருமான காப்பியக்கோ டாக்டர் ஜின்னா ஷரீப்புதீன் அவர்களின் தலைமை தாங்குவார்.
நினைவுப் பேருரையை மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்,எழுத்தாளர், பன்னூலாசிரியர் மயில்வாகனம் திலகராஜா அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.
மேலும் இலங்கையின் முக்கிய பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.