அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா 2023!

Date:

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா  எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு பிரதான மண்டபத்தில் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக மதிப்பிற்குரிய கல்வி ராஜாங்க அமைச்சர்  அரவிந்தகுமார் அவர்களும் மாலைதீவுகள் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் இலங்கை உயர்ஸ்தானியர்களும் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பிக்கின்றனர்.

இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்களில் இருந்தும் சுமார் ஐந்து பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வைப்பதற்காக வருகை தருகின்றனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் திரு சானக உதயக்குமார அமரசிங்க அவர்களும் விசேட சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்த உள்ளார்.

கல்லூரியின் 35 விரிவுரையாளர்களும் 20 ஊழியர்களும் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

சிறந்த விரிவுரையாளர்களுக்கான விருதுகளும் சிறந்த இணை நிறுவனத்திற்கான விருதுகளும் இந்நிகழ்வில் வழங்கப்பட உள்ளது.

இதேவேளை மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் உட்பட 1000 க்கும் அதிகமானோர் இந்நிகழ்ச்சியை அலங்கரிக்க உள்ளனர் என அமேசன் கல்லூரியின் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் அவர்கள் தெரிவித்தார்.

120 டிப்ளோமா மாணவர்கள், 50 HND மாணவர்கள் 150, பட்டதாரி மற்றும் முதுமாணி மாணவர்கள் விருதுகளை பெறுகின்றனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...