இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஜப்பான் நிதி அமைச்சர்

Date:

ஜப்பான் நிதி அமைச்சர் Shun’ichi Suzuki எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு ஆசிய நாடுகளுடனான ஜப்பானின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அந்த நாட்டு நிதி அமைச்சர் எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி முதல் நான்கு நாள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்படி, இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜப்பானிய நிதி அமைச்சர் Shun’ichi Suzuki தெரிவித்துள்ளார்.

Shun’ichi Suzuki அவரது விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கடன் மறுசீரமைப்பு குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மற்றும் ஜப்பான் தலைமையிலான கடனாளிகள் குழு, கடனை மீள செலுத்துவதை ஒத்திவைப்பது மற்றும் வட்டி விகிதங்களைக் குறைப்பது தொடர்பான அடிப்படை உடன்பாட்டை கடந்த நவம்பர் மாதம் எட்டியது.

இந்த நிலையில், கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு நிலையான முன்னேற்றம் மிகவும் முக்கியமானது என ஜப்பானிய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...