எனது கடினமான முடிவுகள் மக்களுக்கு சிரமமானதாக இருந்தாலும் அவற்றை தாங்கிக்கொண்டனர்: ஜனாதிபதி

Date:

அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள இருக்கும் பேராசையை தேர்தல் காலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்வோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக அரசியல்வாதிகள் மக்கள் முன்னிலையில் உருவாக்கி கூறும் கதைகள் குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைமைக்கு செல்லும் வழியேற்படும்.

நாட்டை கட்டியெழுப்புவதற்காக இரண்டாவது தவணை கடனை வழங்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக சர்தேச நாணய நிதியம் உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த சவாலான பயணத்திற்கு தலைமை தாங்க முடிந்தமை குறித்து எனக்குள் பெரும் மகிழ்ச்சி இருக்கின்றது.

தற்போது பாராளுமன்றத்தில் உரையாற்றும் வீரர்கள், தலைவர்கள் எவருக்கும் முன்வந்து தலைமையேற்கும் தைரியம் இருக்கவில்லை.என்னிடம் திடசங்கட்பமும் திட்டங்களும் மட்டுமே இருந்தன.

இந்த பயணம் தொடர்பில் சிலர் கேலியாக பேசினர்.எனினும் மக்கள் சிரமத்திற்கு மத்தியிலும் அர்ப்பணிப்புகளை செய்தனர்.

நான் எடுத்த சில கடினமான முடிவுகள் மக்களுக்கு சிரமமானதாக இருந்தாலும் அவர்கள் அவற்றை தாங்கிக்கொண்டனர். அனைவரும் அனுபவித்த கஷ்டங்களின் பிரதிபலனாக நாட்டை வங்குரோத்தில் இருந்து தற்போது மீட்க முடிந்துள்ளது.

அனைவரும் நாடு மேற்கொள்ளும் இந்த பயணத்தின் கௌரவமான பங்காளிகள். பல நாடுகள் வங்குரோத்து அடைந்து, அதில் இருந்து மீள எடுத்துக்கொண்ட காலத்தை விட குறைந்த காலத்தில் இலங்கை அதில் இருந்து மீள முடிந்துள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை...

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...