குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவன்: கொலையாக இருக்கலாம் என சந்தேகம்?

Date:

சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுவனொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய எம்.எஸ்.முஷாப் எனும் மாணவனே கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று இரவு 5.30- 7.30 மணிக்கிடையில் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குறித்த மதரஸாவின் நிர்வாகியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த  மாணவனின் மரணம் தற்கொலையல்ல கொலையாகவே இருக்கும் என்றும் அந்த மதரஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே நிறைய பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் கூறி பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

களத்திற்கு வருகைத்தந்த சாய்ந்தமருது பொலிஸார் மதராஸாவின் மான்பை பேணும்விதமாக மக்கள் கலைந்து செல்லுமாறும், இந்த மரணம் தொடர்பில் நியாயமான விசாரணையை முன்னெடுக்க பொலிஸார் தயாராக இருப்பதாகவும், தடயியல் பொலிஸாரையும்,  நீதவானையும் வரவழைத்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் பொதுமக்களுக்கு வழங்கிய உறுதியையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

எவ்வாறாயினும் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வினவியபோது, இந்த மரணம் தொடர்பில் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகள் முடியும் வரை எதுவும் கூறமுடியாதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...