குவைத் அரசின் மன்னர் (அமீர்) ஷெய்க் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபிர் அவர்களின் மறைவையிட்டு, கொழும்பில் உள்ள அந்நாட்டுத் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபக் குறிபேட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இன்று (18) காலையில் தனது அனுதாபங்களைப் பதிவு செய்தார்.
அதேநேரம் இலங்கைக்கான குவைத் நாட்டின் பொறுப்பதிகாரி உஸ்மான் அல் உமருடனும் தனது அனுதாபத்தைப் பகிர்ந்து கொண்டார்.
குவைத்தின் மன்னர் (எமிர்) ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா நேற்று முன்தினம் தனது 86 வயதில் மரணமடைந்தார்.