ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தம்மிக்க பெரேரா?

Date:

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை முன்னிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான செய்தியை சகோதர ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிட தயார் என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

‘எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விருப்பம். எவ்வாறாயினும், மொத்த வாக்குகளில் குறைந்தது 51 வீதமான வாக்குகளைப் பெறுவது உறுதியானால் மாத்திரமே தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்’ என தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தம்மிக்க பெரேரா, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளதுடன், பொருளாதாரத்தின் பல துறைகளிலும் கற்று அனுபவம் பெற்றவராவார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறப்படும் வேட்பாளர்களில் தம்மிக்க பெரேரா மாத்திரமே இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான குறிப்பிட்ட, நடைமுறை வேலைத்திட்டத்துடன் கூடிய செயற்திட்டமொன்றையும் முன்வைத்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...