பதில் பொலிஸ்மா அதிபர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது: சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Date:

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை குறித்து இலங்கை சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை சித்திரவதை செய்ததாக உயர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், தேசபந்து தென்னகோனை பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை எவ்வாறு அனுமதி வழங்கியது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான சில வழக்குகள் நிலுவையில் இருப்பதன் காரணமாக, அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எந்த அடிப்படையில், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு அரசியலமைப்பு பேரவையினால் அவர் பதில் பொலிஸ்மா அதிபராக அங்கீகரிக்கப்பட்டார் என பேராசிரியர் சாவித்திரி குணசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, பொதுமக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுமாறு சட்டத்தரணிகள் கூட்டமைப்பு, ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவையை வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

பெய்து வரும் கனமழையால் கிரகரி வாவியின் நீர்மட்டம் உயர்வு!

நுவரெலியா பகுதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக கிரகரி வாவியின் (Gregory...

அரச ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – பிரதமர்!

அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதியக் கொள்கையை நிலையான...

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

களு கங்கையின் குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய...

டிரம்ப்பிற்கு பலத்த அடி! சிஎன்என் உள்ளிட்ட ஊடகங்களின் தடையை நீக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சிஎன்என் (CNN), எம்.எஸ் நவ் (MS...