டிரம்ப்பிற்கு பலத்த அடி! சிஎன்என் உள்ளிட்ட ஊடகங்களின் தடையை நீக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

Date:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சிஎன்என் (CNN), எம்.எஸ் நவ் (MS NOW) மற்றும் பாலிடிகோ (Politico) ஆகிய முன்னணி செய்தி நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய விதித்த தடையை உடனடியாக நீக்குமாறு அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளை மாளிகை அணுகலைத் தடை செய்த டிரம்ப்பின் நடவடிக்கை, அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என நீதிபதி டிமோதி கெல்லி  சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்தில் இந்த மூன்று ஊடகங்களும் தனக்கு எதிராக பொய் செய்திகளை (Fake News) பரப்புவதாகக் கூறி, வெள்ளை மாளிகைக்குள் செய்தி சேகரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்தார். இந்த தடையை எதிர்த்து குறித்த செய்தி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

வழக்கை விசாரித்த நீதிபதி, பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் அரசியலமைப்பின் முதல் திருத்தத்தை (First Amendment) சுட்டிக்காட்டி, செய்தி நிறுவனங்களின் வெள்ளை மாளிகை அனுமதிச் சீட்டுகளை (Press Credentials) உடனடியாக மீண்டும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். டிரம்ப் நிர்வாகத்திற்கு கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

22வது திருத்தத்திற்கு எதிராக சஜித் ஆர்ப்பாட்ட களத்தில்!

அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்யப்பட்ட...

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி...

அனோஜனுக்காக மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள அனோஜன் சிவராசாவை குறித்த தண்டனையிலிருந்து...

பத்தரமுல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்: 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக SJB போராட்டம்

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி...