தாழமுக்கம் அடுத்த 12 மணிநேரத்தில் சூறாவளியாக மாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Date:

தென்மேற்கு வங்களா விரிகுடா கடற்பரப்புக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 12 மணிநேரத்தில் சூறாவளியாக மாறும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த சூறாவளி இலங்கையின் வடக்கு கரையை அண்மித்ததாக நாட்டை விட்டு விலகி நாளையதினம் வடக்கு தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

பின்னர், நாளை மறுதினம் தெற்கு ஆந்திர கடற்பரப்பை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

இதன்காரணமாக மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், காலியிலிருந்து மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தை அந்த திணைக்களம் கோரியுள்ளது

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...