நாட்டின் சவால்களை அறிந்து, பொறுப்புகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபடுவோம்: ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்து

Date:

எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றி அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை நத்தார் பண்டிகை அமைய பிரார்த்திப்போம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்து செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

“வறியவர்களுடன் ஒரு வேளை உண்ணுங்கள்” என்ற விடயத்தை முன் நிறுத்தி, மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவைக் கொண்டாடும் நாம், ஒருபோதும் யதார்த்தத்தை மறக்க கூடாது.

அத்துடன் மானிடர்களைப் பாவங்களிலிருந்து விடுவிப்பதற்காக சிலுவையில் உயிர் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூர்ந்து கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

நத்தார் கொண்டாட்டத்தினால் சிறந்த மாற்றங்கள் கிடைக்கும். அவ்வாறான மாற்றங்கள் உளப்பூர்வமானதும் உண்மையானதுமாக இல்லாத போது நத்தார் கொண்டாட்டம் அர்த்தமற்றாகிவிடும்.

பல்வேறு சவால்கள் நம்முன் நிற்கின்ற தருணத்தில், நாம் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகின்றோம்.

நாட்டின் சவால்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொண்டு, பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டுமென அழைப்பு விடுக்கிறோம்.

அதேநேரம், உலக மக்கள் அனைவருக்கும் அன்பும், அமைதியும் நிறைந்த பண்டிகையாக இம்முறை நத்தார் பண்டிகை அமைய என வாழ்த்துகிறேன்” என்றும் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

வருமான வரி செலுத்துவதற்கான இறுதி நாள் இன்று: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை!

2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரியைச் செலுத்துவதற்கான கடைசி நாள்...

சவூதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

துபாயிலிருந்து டெல் அவிவ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு வணிக ரீதியான விமானம்,...

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 12இல் சமர்ப்பிப்பு!

2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில்...

பாகிஸ்தான் உயர் ஆணையகத்தின் ஏற்பாட்டில் ISSI–SASSRI இடையே வரலாற்றுப் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே ஆய்வு மற்றும் உத்திசார் (strategic) ஒத்துழைப்பை மேலும்...