மத நல்லிணக்கத்தின் கேந்திர நிலையமான புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர்களின் நல்லிணக்க விஜயம்!

Date:

மாத்தறை-யாழ்ப்பாண மாவட்டங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் ஒரு அம்சமாக, மாத்தறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அவரது குழுவினர் கடந்த 08ஆம் திகதி காலை புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தனர்.

நீதி அமைச்சின் தேசிய நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், மாத்தறை மாவட்டச் செயலகம், புத்தளம் பெரிய பள்ளிவாசல், புத்தளம் மாவட்ட சர்வமதக் குழு ஆகியன இணைந்து இந்த கலாச்சார மற்றும் சர்வமத நல்லிணக்கம் தொடர்பான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
அதன்படி, புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், புத்தளம் மாவட்ட செயலாளர், எச்.எம்.எஸ்.பி ஹேரத், புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஸ்ஷெய்க் அப்துல்லா மஹ்மூத் ஆலிம், புத்தளம் சர்வமதக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தியகம ரத்தன தேரர், தம்ம குசல தேரர் , சிவஸ்ரீ சுந்தரராம குருக்கள், அருட்தந்தை யோஹான் மற்றும் அஷ், முஜீப் சாலிஹ் உள்ளிட்ட உறுப்பினர்கள் அன்புடன் வரவேற்றனர்.
இந்நிகழ்வில் ரம்யா லங்காவின் பணிப்பாளர்  அலி சப்ரி வரவேற்புரையை நிகழ்த்தினார்.
தேசிய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பணியகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித் திட்டமான இந்நிகழ்வில் புத்தளம் நகரை அண்மித்த பிரதேச உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மாவட்ட சர்வமதக் குழு சார்பாக திருமதி முஸ்னியா உவைஸ் சிறு உரையொன்றை நிகழ்த்தினார். அதன் பின்னர் புத்தளம் மாவ‌ட்ட செயலாளர், எச்.எம்.எஸ்.பி.ஹேரத் மற்றும் மாத்தறை மாவ‌ட்ட செயலாளர்,வை.விக்ரம ஸ்ரீ ஆகியோரின் உரை இடம்பெற்றது.

மாத்தறை மற்றும் புத்தளம் பிரதேசங்களுக்கு இடையிலான குறிப்பிடத்தக்க நல்லிணக்கமும் சகவாழ்வும் நாட்டிற்கு முன்னுதாரணமாக அமையும் என தெரிவித்த அவர்கள், இவ்வாறான பயணங்களின் ஊடாக சமூகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து மாத்தறை மாவட்ட செயலாளருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பொன்னாடை அணிவிக்கப்பட்டதுடன், அங்கிருந்த சர்வமதக் குழு உத்தியோகத்தர்கள் நினைவுப்பரிசில்களை வழங்கினர்.
வருகை தந்த குழுவினர் புத்தளம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தை சுற்றிப் பார்த்துடன் அங்கு மேற்கொள்ளப்படும் அன்றாட சமய சடங்குகள் குறித்தும் அறிந்து கொண்ட கொண்டனர்.
ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் நிஜாம் மற்றும் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் ஆகியோர் இதனை நெறிப்படுத்தினர்,

அத்துடன் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்க மன்னரின் ஆட்சிக் காலத்தில் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகளையும் பள்ளிவாசலில் உள்ள வரலாற்றுக் கால கடிகாரத்தையும் குழுவினர் பார்வையிட்டனர்.
நிகழ்வின் நன்றியுரையை சர்வமதக் குழுவின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எம். ருமைஸ் நிகழ்த்தினார்.
புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை மற்றும் புத்தளம் சர்வமதக் குழு உறுப்பினர்கள் வருகைத்தந்த அனைவருக்கும் காலை உணவை தயாரித்து மகிழ்ச்சியுடன் வழங்கினர்.
இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமை குறித்து வருகைதந்த அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

புத்தளம் பிரதேசம் சர்வமத நல்லிணக்கம் சிறப்பாக செயற்படும் பிரதேசமாகும், புத்தளம் சர்வமதக் குழு இவ்வாறான நிகழ்ச்சிகளை தொடராக நடாத்தி இனங்களுக்கிடையிலான தவறான புரிதலை நீக்கும் முயற்சியில் நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...