அகதிகள் முகாமை குறிவைத்து குண்டுவீச்சு: மத்திய காசாவிலும் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்!

Date:

தற்போது மத்திய காசாவிலும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 2 மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது.

போர் விமானங்கள் மூலம் குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை வீச்சு நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் காசாவுக்குள் இஸ்ரேல் தரைப்படையும் தாக்குதல் நடத்துகிறது. முதலில் வடக்கு காசாவில் தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், அதன்பின் தனது தாக்குதலை விரிவுபடுத்தியது. மத்திய, தெற்கு, காசாவிலும் குண்டுகள் வீசப்படுகிறது.

இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், அப்பாவி பொதுமக்கள் என பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. காசா முனை பகுதி முழுவதும் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதால் மக்கள் உயிர் பயத்தில் இருக்கிறார்கள்.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மத்திய காசாவிலும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

மத்திய காசா பகுதியில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகர்ப்புற அகதிகள் முகாம்களில் தரைவழி தாக்குதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, தெற்கு காசாவை தொடர்ந்து மத்திய காசாவிலும் தரைவழி தாக்குதல் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதால் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையே இஸ்ரேல் ராணுவ தலைவர் ஹெர்சி ஹலேவி கூறும்போது, ஹமாஸ் மீதான போர் இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கலாம். ஹமாஸ் அமைப்பை தகர்ப்பதில் குறுக்குவழிகள் எதுவும் இல்லை. உறுதியான மற்றும் தொடர்ச்சியான சண்டைகள் மட்டுமே நடக்கின்றன. நாங்கள் ஹமாசின் தலைமையை அழிப்போம். அதற்கு சில மாதங்கள் எடுக்கலாம் என்றார்.

இந்த நிலையில் பலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...