அபுதாபியில் இந்து கோயில் திறப்பு விழா: இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு

Date:

அபுதாபியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்து கோயில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை கோயில் நிர்வாகிகள் பிரதமர் மோடியிடம் வழங்கினர்.

ஐக்கிய அமீரக ஏமிரேட்சின் அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு சார்பில் பிரமாண்டமான முறையில் இந்து கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் 2024
பிப்ரவரி மாதம் திறக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் கோவில் நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்துத் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கினர். அதனை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக கோவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் கோவிலுக்கான இடத்தை வழங்கிய அமீரக அரசுக்கு ஏற்கனவே நன்றி தெரிவித்திருந்தார்.

இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கு இணங்க அபுதாபியில் இந்து கோயில் கட்ட அமீரக அரசு அனுமதியளித்துள்ளது.

அதற்காக துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 55 ஆயிரம் சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டது.

கோவில் கட்டுமான பணிகளில் மொத்தம் 30 ஆயிரம் சிற்ப வேலைபாடுகளை கொண்ட கற்கள் இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது.

சுவரின் அடிப்பகுதியில் கிரானைட் கற்களும் அதன் மீது இளஞ்சிவப்பு கற்களும் கொண்டு சுவர்கள் எழுப்பப்பட்டது.

கட்டிடத்தின் வெளிப்புறத்தில் கட்டப்படும் கற்கள் அனைத்தும் இந்தியாவின் ராஜஸ்தானில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதேபோல் உட்புறத்தில் உள்ள கட்டமைப்புகள் இத்தாலி நாட்டு மார்பிள் கற்களால் செய்யப்பட்டுள்ளது

Popular

More like this
Related

காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணியர் இருக்கைகளிலும் இருக்கைப் பட்டி...

சலேவின் இடைக்கால மனு விசாரணை ஒத்திவைப்பு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தனது கைது...

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...