இன்று நள்ளிரவு காலிமுகத்திடலில் பல நிகழ்ச்சிகள்: விசேட பாதுகாப்பு திட்டங்கள் அமுல்

Date:

சுற்றுலா அமைச்சு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு இணைந்து இன்று இரவு புதுவருட பிறப்பை முன்னிட்டு காலி முகத்திடலில் பல தனித்துவமான நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த ஆண்டின் மிகப்பெரிய இசை நிகழ்ச்சி அங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த இசை நிகழ்ச்சியில் இலங்கையின் பல நட்சத்திரங்கள் பாடுவார்கள் எனவும் ஃப்ளாஷ் பேக் இசைக்குழுவால் கச்சேரி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் இலட்சக்கணக்கான மக்களின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்த இடங்களிலிருந்து மக்களை காலிமுகத்திடல் கச்சேரி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் பல பேருந்துகள் தயார் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...