இரண்டாம் தவணை கொடுப்பனவிற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

Date:

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணை கொடுப்பனவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையுடன் இணக்கம் காணப்பட்டுள்ள 48 மாதங்களுக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வு, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையில் நேற்றிரவு (12) நிறைவடைந்த நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணை கொடுப்பனவாக இலங்கைக்கு 337 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது. இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி அனுமதி வழங்கியது.

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த கடன் வசதி வழங்கப்படுகிறது. இந்த கடன் வசதியின் முதலாவது தவணை கொடுப்பனவாக 330 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது.

இரண்டாம் தவணை கொடுப்பனவிற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளதால், மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை கடந்து, நிவாரண பொருளாதார வலயத்திற்குள் உள்நுழைவதற்கான இயலுமை கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தமது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...