கட்சி தீர்மானித்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்: மைத்திரி அறிவிப்பு

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபையில் தீர்மானிக்கப்பட்டால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிட தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிங்கிரிய பிரதேச பிரதிநிதிகளுக்கான நியமனம், கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கிவைக்கப்பட்டது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

அந்த வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இவர்களைத் தவிர பிரபல வர்த்தகர்களான திலித் ஜயவீர, தம்மிக்க பெரேரா மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்கு நான்கு நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

வருமான வரி செலுத்துவதற்கான இறுதி நாள் இன்று: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை!

2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரியைச் செலுத்துவதற்கான கடைசி நாள்...

சவூதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

துபாயிலிருந்து டெல் அவிவ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு வணிக ரீதியான விமானம்,...

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 12இல் சமர்ப்பிப்பு!

2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில்...

பாகிஸ்தான் உயர் ஆணையகத்தின் ஏற்பாட்டில் ISSI–SASSRI இடையே வரலாற்றுப் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே ஆய்வு மற்றும் உத்திசார் (strategic) ஒத்துழைப்பை மேலும்...