காஸா மக்களை பட்டினியால் அழிக்க இஸ்ரேல் முயற்சி: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

Date:

காஸா மக்களை பட்டினியால் அழிக்க இஸ்ரேல் முயற்சித்து வருவதாக அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

காஸாவிற்குள் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்காத இஸ்ரேல், காஸா மக்களைப் பட்டினியால் கொல்ல முயற்சித்து வருகிறது. இது ஒரு போர் குற்றமாகும் என மனித உரிமை கண்காணிப்பகம் தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது.

தண்ணீர், உணவு, எரிபொருள், மருந்துபொருட்கள் உட்பட மனிதநேய உதவிகள் காஸா பகுதிக்குள் போதுமான அளவுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

விளைநிலங்கள் உட்பட மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இஸ்ரேல் இராணுவம் அழித்துவருகிறது.

நான்காவது ஜெனீவா உடன்படிக்கையின் படி காஸாவில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் உணவு, தண்ணீர் மற்றும் உதவிகளை வழங்க வேண்டியது பலஸ்தீனத்தை ஆக்கிரமித்திற்கும் இஸ்ரேலின் பொறுப்பு என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மக்களின் பட்டினியை மனதில் கொண்டு இஸ்ரேலைப் போரை நிறுத்துமாறு அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இஸ்ரேல்,மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, யூதர்களுக்கு எதிரான அமைப்பு எனவும் காஸா மீதான போரை நிறுத்த முடியாது எனவும் கூறியுள்ளது.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...