கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்கு இன்று முதல் விசேட போக்குவரத்து!

Date:

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அமுல்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து சேவைகள் இன்று (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

நத்தார் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இந்த விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் 100 மேலதிக பஸ்கள் நீண்ட தூர சேவைகளுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ண ஹன்ச தெரிவித்தார்.

அத்துடன், பண்டிகை கால சிறப்பு ரயில் சேவை நாளை (23) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்துப் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே. இதிபோலகே தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் விசேட நேர அட்டவணையின் படி இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அட்டவணை இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...