ஜனவரியில் ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் அமுல்படுத்தப்படும்

Date:

 ஜனவரி 23 ஆம் திகதி ஒன்லைன் (நிகழ்நிலை) பாதுகாப்பு சட்டமூலத்தை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஒன்லைன் பாதுகாப்பிற்காக இதுபோன்ற சட்டமூலத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், சிவில் சமூக இயக்கங்கள் சட்டமூலத்தில் இணைக்கப்பட வேண்டிய தொழில்துறை பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெற மூன்று மாத ஆலோசனை செயல்முறையை நாடியது.

சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்க சிங்கப்பூர் சென்றது. இந்த சட்டமூலம் சிங்கப்பூரின் ஒன்லைன் பொய்மைகள் மற்றும் கையாளுதல் சட்டத்திலிருந்து (POFMA) பரவலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற வாரத்தில் இந்த சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்படும் என பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் அஷு மாரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்துறை பங்குதாரர்களின் உள்ளீடுகளை இந்த சட்டமூலத்தின் இறுதிச் சட்டத்தில் இணைப்பதற்கு அமைச்சு காத்திருக்கிறது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...