எதிர்வரும் 26 ஆம் திகதி ஏற்படும் கிரக நிலையானது கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கை எதிர்நோக்கிய பயங்கரமான சுனாமி நிலைமைக்கு இணையான இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய நிலைமையில் இருப்பதாக ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் இலங்கை எதிர்நோக்கிய சுனாமி அனர்த்தம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
கிரக நிலைகளுடன் ஒப்பிடும் போது, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதியும் பௌர்ணமி தினமாக அமைந்துள்ளது.
கிரக நிலைகளும் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி காணப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இலங்கையில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை இன்னும் முடியவில்லை.
மத்திய மலைநாட்டில் அடிக்கடி மண்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.உலகில் வேறு நாடுகளிலும் பூகம்பங்கள் ஏற்பட்டு வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இதன் காரணமாகவே கடந்த 2004 ஆம் ஆண்டு காணப்பட்டது போன்ற கிரக நிலை இந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதியும் காணப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.