தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள 48 மணிநேர அடையாள வேலை நிறுத்த போராட்டத்தினால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை 4.00 மணிமுதல் 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தபால் ஊழியர்கள் தீர்மானித்திருப்பதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்திருந்தது.
குறித்த பணிப்புறக்கணிப்பில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களின் செயற்பாடுகள் முற்றிலும் தடைப்பட்டுள்ளன. இதன்காரணமாக பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.