துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கங்கள் நாளைய தினம் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் சேவைகளை முடக்கும் வகையில் அல்லது நாளாந்த செயற்பாடுளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், நாளை (28) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை அல்லது வேலைநிறுத்ததுக்கு தடை விதித்தே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.