போதைப்பொருள் வர்த்தகர்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி தலைமறைவாவதை தடுப்பதற்கும், அவர்களை கைது செய்யவும், பதில் பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கான ஆலோசனைகள் சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதேநேரம், போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகளில் எந்தவொரு நபருக்கும் பொலிஸாரால் அநீதி ஏற்படுமாயின் அது தொடர்பில், சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பழிவாங்கல் நோக்கத்துடன் எவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றோம்.
இந்தநிலையில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் பொலிஸ் பேச்சாளர் கோரியுள்ளார்.