போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

Date:

இஸ்ரேலிய தாக்குதல்களிலிருந்து தப்பித்து காசாவின் தெற்கு பகுதி சென்ற கர்ப்பிணிப் பெண்ணொருவர் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

28 வயதான இஸ்மான் அல்-மஸ்ரே என்ற பெண்ணே இவ்வாறு 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

அவர் காசா பகுதியின் வடக்குப் பகுதியில் வசித்து வந்த நிலையில் இஸ்ரேலிய தீவிரவாத படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால், அவர் தனது கணவருடன் தெற்கு காசாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த கர்ப்பிணிப் பெண் நேற்று முன்தினம் (28-12-2023) 2 பெண் குழந்தைகளையும் 2 ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.

தெற்கு காசாவில் மருத்துவமனை வசதிகள் காணப்படாத நிலையில் அங்குள்ள ஒரு பாடசாலை கட்டிடத்தில், குறைந்த வசதிகளுடன் இயங்கும் மருத்துவ மையத்திலேயே குறித்த கர்ப்பிணிப் பெண் நான்கு குழந்தைகளையும் பிரசவித்துள்ளார்.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...