மலையக ரயில் சேவையில் பாதிப்பு!

Date:

ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடையில் இன்று (19) காலை ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயில் ஹப்புத்தளையில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ரயில் பாதை தடைப்பட்டுள்ளதால் உடரட மெனிக்கே ரயிலும், பொடி மெனிகே ரயிலும்  இன்று காலதாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, காலை 05.45 மணிக்கு பதுளையில் இருந்து கோட்டை வரை இயக்கப்பட வேண்டிய  உடரட மெனிக்கே ரயில் இது வரை புறப்படாமல் உள்ளது.

அத்துடன், காலை 08.30 மணிக்கு கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த பொடி மெனிகே ரயிலும் சில மணித்தியாலங்கள் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவினால் தடைப்பட்ட ரயில் பாதையில் மண் அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு இன்னும் சில மணித்தியாலங்கள் ஆகும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

அனோஜன் சிவராசா அவர்களின் உயிரைக் காப்பாற்றவும், விடுதலைக்காகவும் சைவநெறிக்கூடம் விரைந்த வேண்டுகோள்

சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் இயங்கி வரும் சைவநெறிக்கூடம், இலங்கைக் குடிமகனான திரு....

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முஹமதின் மனைவி சித்தி ஹஸ்மா அலி 100வது வயதில் காலமானார்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதின் மனைவியான டாக்டர் சித்தி...

போக்குவரத்து விதிமீறல்களுக்கு ‘குறைபாட்டுப் புள்ளி’ முறை ஒக்டோபரில் ஆரம்பம்!

போக்குவரத்து விதிமீறல்களுக்கான ‘குறைபாட்டுப் புள்ளி’ (Demerit Points) முறையை நடைமுறைப்படுத்தும் ஆறு...

ஆசிய தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்று கம்பஹா சிறுவன் ஃபஹத் நவாஸ் சாதனை!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறவுள்ள ‘6 வது ஆசிய உள்ளக...