மாலைதீவு – இலங்கைக்கு இடையில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு!

Date:

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் மாலைதீவு குடியரசுக்கும் இடையிலான குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்புக்களை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கு ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

எனினும், மாலைதீவு தரப்பினர் ஒப்பந்த வரைபுக்கு பின்னர் ஒரு சில மேலதிக திருத்தங்களை முன்மொழிந்து, குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் இருந்தனர்.

பின்னர் இருதரப்பின் உடன்பாடுகளுக்கமைய திருத்தப்பட்ட புதிய ஒப்பந்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும், பின்னர் ஒப்பந்தத்தை இருநாடுகளின் இராஜதந்திர தூதுக்குழுவால் ஏற்று அங்கீகரிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...