3000க்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள்: அரச ஊழியர்களுக்கே அதிக முறைப்பாடுகள்!

Date:

இந்த வருடம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 3000க்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனவரி 1ஆம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை 3,255 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றுள் கணிசமான எண்ணிக்கையானது அரச ஊழியர் கட்டமைப்பின் செயற்பாடுகளின் அடிப்படையில் பெறப்பட்ட முறைப்பாடுகளாகும்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கிட்டத்தட்ட 100 முறைப்பாடுகளும், அதிபர்களுக்கு எதிராக கிட்டத்தட்ட 50 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற இலஞ்ச முறைப்பாடுகளுடன் ஒப்பிடுகையில் விசாரணைப் பணிகளைத் தொடர்வதற்கு ஆணைக்குழுவில் உள்ள வெற்றிடங்களை விரைவாக நிரப்ப வேண்டிய தேவை இருப்பதாகவும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...