ஒரினச் சேர்க்கைக்கு பாப்பாண்டவர் அனுமதி!

Date:

ஆணும் பெண்ணும் திருமணம் செய்யும் மனித குல மரபுக்கு மாற்றமாக ஒருபால் திருமணம் செய்பவர்களையும் கிறிஸ்தவ மதகுருக்கள் ஆசீர்வதிக்க வேண்டும் என பாப்பாண்டவர் அனுமதி வழங்கியுள்ளார்.

ஒருபால் திருமணத்தை அனுமதிக்க முடியாது என வத்திக்கான் ஆரம்ப முதலே தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தது.

திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலானது மட்டும் தான் என்ற தேவாலயத்தின் கோட்பாட்டை இது இழிவுபடுத்தும் என வத்திக்கான கூறி வந்தது.

இந்த நிலையில் ஒருபால் திருமணத்தில் ஈடுபடுபவர்களையும் ஆசீர்வதிக்க வேண்டும் என பாப்பாண்டவர் பிரான்சிஸ் நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.

வத்திக்கான் தேவாலயத்தின் கார்டினல் விக்டர் மனுவல் பெர்ணான்டஸ் இந்த அறிவித்தலை உத்தியோகபூர்வமாக நேற்று வெளியிட்டார்.

இது வத்திக்கானின் திருமணம் பற்றிய கொள்கைளை மாற்றாது எனவும் ஒரேபால் அல்லது முறைசாராத் திருமணம் புரிபவர்களையும் ஆசீர்வதிப்பதற்கான வசதியை வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

திருணம பந்தத்தின் போது கத்தோலிக்க மதகுருக்கள் கடவுளின் பிரசன்னத்தை அவ்விடத்தில் வேண்டுவதோடு கடவுளின் உதவி அவர்களுக்குக் கிட்ட வேண்டும் எனவும் ஆசீர்வதிப்பர்.

ஓரினச் சேர்க்கையாளர்களையும் கிறிஸ்தவ மதகுருக்கள் இவ்வாறு ஆசீர்வதிக்க அனுமதிக்க வேண்டும் என கார்டினல்கள் சிலர் 2021 இல் கோரிக்கை முன்வைத்த போது கடவுள் பாவங்களுக்கு ஆசீர்வாதம் வழங்க முடியாது என பாப்பாண்டவர் மறுத்திருந்தார்.

தற்போது ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு கடவுள் பிரசன்னமாக வேண்டும் எனவும் அவர்களுக்கு கடவுள் உதவி செய்ய வேண்டும் எனவும் ஆசீர்வாதம் வழங்குவதற்கு அவர் அனுமதித்துள்ளார்.

இது LGBTQ சமூகம் தொடர்பிலான தேவாலயத்தின் முன்னேற்றகரமான தீர்ப்பு எனக் கருத்து வெளியிட்டுள்ள LGBTQ சமூகத்துக்காக வாதிட்டு வருகின்ற அருட்தந்தை ஜேம்ஸ் மார்டின், தங்களது அன்புப் பிணைப்பின் போது கடவுள் பிரசன்னமாகுமாறு தாம் ஆசீர்வதிக்கப்படுவதை விரும்புகின்ற அனைத்து கத்தோலிக்க ஓரினச் சேர்க்கையாளர்களதும் விருப்பத்தை இது அங்கீகரிக்கிறது எனவும் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக ஜேர்மனியின் தேவாலயம் ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியிருந்தது.

Popular

More like this
Related

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...