கிரிக்கெட் தொடர்பிலான வர்த்தமானி இரத்து: புதிய வர்த்தமானி அறிவித்தல்

Date:

இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழு நியமனம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரங்கள், பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழு கலைக்கப்படவுள்ளது.

2023 நவம்பர் 05 ஆம் திகதி அர்ஜூன ரணதுங்க தலைமையில் ரொஷான் ரணசிங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு நியமனம் தொடர்பான வர்த்தமானியை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெய்து வரும் கனமழையால் கிரகரி வாவியின் நீர்மட்டம் உயர்வு!

நுவரெலியா பகுதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக கிரகரி வாவியின் (Gregory...

அரச ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – பிரதமர்!

அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதியக் கொள்கையை நிலையான...

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

களு கங்கையின் குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய...

டிரம்ப்பிற்கு பலத்த அடி! சிஎன்என் உள்ளிட்ட ஊடகங்களின் தடையை நீக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சிஎன்என் (CNN), எம்.எஸ் நவ் (MS...