தொலைபேசிகளின் விலை 18 சதவீதத்தால் அதிகரிக்கும்!

Date:

தொலைபேசிகளின் விலை அடுத்த மாதத்தில் இருந்து 18 சதவீதத்தால் அதிகரிக்கும் என தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெறுமதி சேர் வரி விதிக்கப்படுவது இதற்கு பிரதான காரணமாகும் என அந்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார்

இதேவேளை, தொலைபேசி இறக்குமதியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் சர்வதேச தொலைபேசி நிறுவனங்களுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்களுடன், இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பல கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், சட்டவிரோத தொலைபேசி இறக்குமதி காரணமாக 3.1 பில்லியன் ரூபா வரி வருமானம் தற்போது இழக்கப்பட்டுள்ளது. குறித்த தொகை எதிர்காலத்தில் 11.9 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் என குறித்த கலந்துரையாடல்களில் தெரியவந்துள்ளது.

தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாமல் சந்தையில் உள்ள தொலைபேசிகள் தொடர்பில் இந்த கலந்துரையாடல்களில் ஆராயப்பட்டுள்ளன.

இந்தநிலைமையை, கருத்திற் கொண்டு குறைந்த விலைகளில் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்காக நுகர்வோர்கள் போலி சந்தைகளை நாடுவார்கள் என கையடக்க தொலைபேசிகளை இறக்குமதி செய்வோர் மற்றும் விற்பனை செய்வோர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...