நாளை அனைத்து அரச ஊழியர்களும் பணியிடங்களுக்கு சமூகமளிக்க வேண்டும்!

Date:

புது வருட பிறப்பான நாளை, அனைத்து அரச ஊழியர்களும் பங்கேற்புடன் உத்தியோகபூர்வ விழாவை தமது பணியிடங்களில் நடத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் பிரதான உத்தியோகபூர்வ வைபவம் நாளை முற்பகல் 09.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

பொதுமக்களுக்கு வினைத்திறனுள்ள மற்றும் பயனுள்ள அரச சேவையை வழங்குவதற்கு முழு அரச சேவையும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதனால் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரச நிறுவனங்களிலும் இந்நிகழ்வு நடத்தப்பட வேண்டுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு சபையின் பிரதானிகளுக்கு சுற்றறிக்கை விடுத்து இந்த விடயம் அறிக்கப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அரச சேவை உறுதிமொழியை உரத்த குரலில் உரைக்க வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...