நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகித்த ‘ஆலா’ என்ற இளைஞன்: மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Date:

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ‘ஆலா’ என்ற இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி , கடந்த திங்கட்கிழமை (4) இரவு விசேட தகவல் ஒன்றினை அடுத்து அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் பொலிஸ் குழுவினர் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சிவில் உடையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது குறித்த ‘ஆலா’ என்ற பெயர் கொண்ட 39 வயதுடைய முஹம்மது இஸ்மாயில் அஸ்மீர் எனும் இளைஞனை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்ட இளைஞன் தடுமாறிய நிலையில் அருகில் உள்ள கடலுக்கு சென்று பாய்ந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் நீச்சல் தெரியாது திணறிய ‘ஆலா’ என்ற இளைஞனை கைது செய்த பொலிஸ் குழு 100 கிராம் கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.

மறுநாள் செவ்வாயக்கிழமை (5) சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...