பதில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 4 மனுக்கள்!

Date:

தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுத்தும், அவர் பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்பதைத் தடுக்கும் உத்தரவைக் கோரியும் 04 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித், உண்மை மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூவர் மற்றும் போராட்டக்காரர் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக செய்துள்ளனர்.

இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், அரசியலமைப்புச் சபை மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னகோன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் போது மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த  தேசபந்து தென்னகோன் தனது கடமைகளை மீறியிருந்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக  தேசபந்து தென்னகோன் செயற்பட்ட காலத்தில், காலி முகத்திடலில் தங்கியிருந்த போராட்டக்காரர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதையும் இந்த மனுக்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இதனால், நாட்டின் சட்டத்தை அமல்படுத்தும் நாட்டின் முக்கிய துறையை கையாளும் பொறுப்பு, மனித நேயமுள்ள ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கு முரணாக செயற்பட்ட ஒருவருக்கு இந்த பொறுப்பை வழங்குவது தமது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...