புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் மேர்வின் சில்வா!

Date:

 விரைவில் புதிய அரசியல் கட்சி நாட்டுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அருகில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, மகேந்திர ஜயசேகர, நவீன் குணரத்ன உட்பட பலர் அந்த கட்சியுடன் இணைந்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்துடனோ அல்லது சஜித் பிரேமதாசவுடனோ அந்த கட்சி இணையாது.

நாட்டின் சட்டத்தரணிகள் உட்பட தொழில் நிபுணர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி மக்கள் பலத்தை காண்பிப்போம்.

நாட்டின் பெரும்பாலான மக்கள் புதிய அரசியல் கட்சியை ஏற்றுக்கொள்வார்கள். நான் அந்த கட்சியில் பிரதான பதவி வகிக்கின்றேன்.

தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் ஊடக அரசியலை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு நாட்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித உணர்வுமில்லை எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...