வெலிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு!

Date:

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காலி வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவர் வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் 42 மற்றும் 52 வயதுடைய தெனிப்பிட்டிய மற்றும் வெலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற மீன் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் எனவும், மற்றையவர் அதே மீன் விற்பனை நிலையத்தில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

நவம்பர் மாதம் முதல் TIN இலக்கத்தை முன்வைப்பது கட்டாயம்

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ளும்...

நாட்டின் பல இடங்களில் இன்று மழைக்கு சாத்தியம்!

நாட்டின் பல இடங்களில் இன்றும் (26) பல இடங்களில் மழையுடன் கூடிய...

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்பு!

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,...

பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டமூலம்’ உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கே – முன்னிலை சோசலிசக் கட்சி சாடல்!

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ளபயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் Protection of the State...