ஹமாஸ் தாக்குதலை வைத்து கொண்டு பலஸ்தீனர்களை தாக்குவது நியாயம் இல்லை: ரஷ்யா கண்டனம்

Date:

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை வைத்து கொண்டு, காசாவில் உள்ள பலஸ்தீனர்களை கூட்டாக தண்டிக்கும் செயலை நியாயப்படுத்துவது என்பது ஏற்று கொள்ள முடியாதது என ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கே லாவ்ரவ்  கூறியுள்ளார்.

கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா நகரில் 2 நாள் சர்வதேச கூட்டம் ஒன்று நடந்து வருகிறது. இதில், ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கே லாவ்ரவ் கலந்து கொண்டு பேசினார்.

முற்றுகையிடப்பட்ட பகுதியில் உள்ள நிலைமையை சர்வதேச அளவில் நாடுகள் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து முன்னறிவிப்பின்றி ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதல் என்பது வெற்றிடத்தில் ஏற்பட்டதல்ல.

காசாவில் பல தசாப்தங்களாக காணப்பட்ட தடைகள் மற்றும் பலஸ்தீனர்களுக்கு தனி நாடு இருக்கும் என அளித்த வாக்குறுதிகள் தசாப்தங்களாக நிறைவேற்றப்படாதது ஆகியவற்றால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு இஸ்ரேல் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு முன் ரஷ்ய அதிபர் புதின் கூறும்போது,

காசாவின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என்பது அமெரிக்க ராஜதந்திரத்தின் தோல்வியாகும் என்றும் பல தசாப்தங்களாக நீடித்து வரும் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன மோதலுக்கு மத்தியஸ்தராக செயல்பட ரஷ்யா தயார் என்றும் கூறினார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 17,700 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். இஸ்ரேலில் 1,147 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவர்களை மீட்கும் முயற்சியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை மேற்கொண்டது.

இதன்பின்பு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, பணய கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டனர். பதிலுக்கு பலஸ்தீன கைதிகளும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். எனினும், போரானது முடிவுக்கு வராமல் உள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...