அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு: ஜனாதிபதி உகண்டாவுக்கு பயணம்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி தனது சுவிட்சர்லாந்து விஜயத்தை தொடர்ந்து அங்கிருந்து உகண்டாவிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 13 ஆம் திகதி அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டு சுவிட்சர்லாந்து பயணமானார்.

அவரது உத்தியோகபூர்வ விஜயம் 12 நாட்களைக் கொண்டதாக அமையுமென என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீவிரவாதம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் உகாண்டாவின் கம்பாலாவில் 19 ஆவது அணிசேரா நாடுகளின் (NAM) உச்சி மாநாடு திங்கட்கிழமை (15) ஆரம்பமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...