பிரியாவிடை பெற்றுச்சென்ற பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ‘நியூஸ் நவ்’க்கு வழங்கிய விசேட நேர்காணல்!

Date:

கேள்வி: கடந்த இரண்டு வருடங்களில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராக இருந்த உங்கள் அனுபவம் எவ்வாறானது?

பதில்: இலங்கை எனும் இந்த மகத்தான தேசத்தில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்த கிடைத்தமையை ஒரு பாக்கியம் மற்றும் கௌரவமாகவே நான் கருதுகின்றேன். எனது தனிப்பட்ட அனுபவம் மிகவும் செழுமையாக இருந்ததுடன், தொழில் ரீதியாக பல பாராட்டுக்களை பெற்றுத்தந்ததாகவும் இருந்தது. இலங்கை சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடனான எனது அன்பையும் பற்றுதலையும் பின்வரும் வார்த்தைகளில் வெளிப்படுத்த விரும்புகிறேன்.

‘ஜனவரி 10, 2024 வரை நான் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராக இருந்தேன். ஆனால், ஜனவரி 11 முதல், பாகிஸ்தானுக்கான இலங்கைத் தூதுவராக நான் இருப்பேன்.’

கேள்வி: சோதனைக் காலங்கள் உட்பட, இலங்கையும் பாகிஸ்தானும் பல வருடங்களாக நல்லுறவை பேணி வந்துள்ளன. தேவை ஏற்படும் போதெல்லாம் இரு நாடுகளும் ஒருவரையொருக்கு உதவிக் கரங்களை நீட்டியுள்ளன. உங்கள் பதவி காலம் முடிந்ததும் எங்கள் இருதரப்பு உறவின் வலிமையை எவ்வாறு இருக்கும் என நீங்கள் மதிப்பிடுகிறீர்கள்?

பதில்: 1948 ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்று எமது தேச பிதாக்களான காயிதே ஆஸம் மற்றும் சர் டி. எஸ். சேனநாயக்கா இருவரும் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டதில் இருந்தே நமது இரு நாடுகளின் உறவு ஆரம்பமாகி தற்போது பிரம்மாணடமாக வளர்ச்சி அடைந்துள்ள நமது உறவின் அசைக்க முடியாத சகோதரத்துவத்தின் அடித்தளமாக அமைந்தது.

கல்வி, கலாச்சாரம் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இரு நாடுகளும் முன்னேறியுள்ளன.

அத்துடன் இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையிலான உறவு முன்மாதிரியாகவும், மூலோபாய கூட்டாண்மையை நோக்கிச் செல்லும் விதத்திலும் அமைந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய பாதுகாப்பு கலந்தாலோசிப்பு நமது பிணைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கானஒரு சிறந்த பிரதிபலிப்பாகும். மேலும், எங்கள் பரஸ்பர உறவு முற்றிலும் நிபந்தனையற்றதாகும்.

கேள்வி:  பாகிஸ்தானிலும் இலங்கையிலும் காந்தார பௌத்த பாரம்பரியம் போன்ற பல பகிரப்பட்ட பொதுவான அம்சங்கள் உள்ளன. காந்தார நாகரீகத்துடன் தொடர்புடைய இரண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் இருந்தன, இது உங்கள் பதவி காலத்தில் பாகிஸ்தானிலும், இலங்கையிலும் நடைபெற்றன. இது பற்றி உங்கள் கருத்துக்களை பகிர முடியுமா?

பதில்: தக்ஷலா, தக்த் பாய், சாவத் மற்றும் ஹைபர் பக்தோன்குவா மாகாணத்தில் உள்ள பல இடங்களில் புத்த பாரம்பரியம் உட்பட பல்வேறு மத தளங்கள் மற்றும் கலாச்சாரத்தால் பாகிஸ்தான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான இலங்கையர்களுக்கு பாகிஸ்தானின் செழுமையான காந்தார பாரம்பரியம் பற்றிய தெளிவு போதுமான அளவு கிடையாது.

எனவே, மதச் சுற்றுலா, குறிப்பாக நமது காந்தாரப் பாரம்பரியத்தின் அடிப்படையில் பாகிஸ்தானின் திறனை வெளிப்படுத்தும் முன்னெடுப்புக்களை நாம் மேற்கொண்டோம். பல இலங்கை பௌத்த துறவிகளை கொண்ட பாகிஸ்தான் சுற்றுலாக்கனை நாம் ஏற்பாடு செய்தோம்.

இது இலங்கையில் பாகிஸ்தானின் பௌத்த பாரம்பரிய செழுமையை பரப்புவதற்கு எங்களுக்கு உதவியது.

அதன் தொடர்ச்சியாக, காந்தார மரபு பற்றிய கருத்தரங்கு ஒன்றும் இலங்கையில் நடத்தப்பட்டது, இதில் இலங்கை முழுவதிலுமிருந்து வந்த பல பௌத்த பிக்குகள் கலந்து கொண்டனர். பல சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானில் இருந்து புத்தரின் புனித நினைவுச் சின்னங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.

எதிர்காலத்திலும் இலங்கை அரசினால் கோரிக்கை விடுக்கப்பட்டால் இது போன்ற முன்னெடுப்புக்களை மேற்கொள்ள நாம் தயாராக உள்ளோம்.

கேள்வி:  இலங்கையைப் போலவே பாகிஸ்தானும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. எவ்வாறாயினும், அல்லாமா இக்பால் மற்றும் ஜின்னா புலமைப்பரிசில் திட்டங்கள் மூலம் இலங்கையர்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து கல்வி உதவிகளை வழங்கி வருகின்றது. மேலும், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தகுதியான இலங்கை மாணவர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளையும் வழங்கி வருகின்றது.  இலங்கைக்கான இது போன்ற பாகிஸ்தானின் மனிதாபிமான உதவிகள் தொடருமா?

பதில்: நிச்சயம் தொடரும். ஜாதி, மதம் மற்றும் இனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இதுபோன்ற புலமைப்பரிசில் திட்டங்கள் மற்றும் உதவித் திட்டங்களை பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொள்ளும். இதற்கும் நமது பொருளாதார நிலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இலங்கையர்களை எமது குடும்பத்தின் ஒரு அங்கமாக நாம் கருதுவதால் இன்ஷhஅல்லாஹ் இத்திட்டங்கள் தொடரும். இலங்கை முழுவதும் நான் பயணித்துள்ளதோடு அதன்போது நான் இலங்கையர்களுடன் வெகு சமீபமானேன். இது இந்த மகத்தான தேசத்தின் இயல்புகளை புரிந்துகொள்ள எனக்கு பெரிதும் உதவியது.

கேள்வி: இலங்கையில் உங்களுடைய பதவி காலத்தில், காய்கறிகள், பழங்கள் உட்பட பல பாகிஸ்தான் தயாரிப்புகளின் கண்காட்சிகளை நீங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றீர்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் யாவை?

பதில்:  குறிப்பாக ஜவுளி மற்றும் தைத்த ஆடைகள், மருந்துப் பொருட்கள், சுற்றுலா அபிவிருத்தி -குறிப்பாக பௌத்த பாரம்பரியம் தொடர்பானவை- ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானம், விவசாய உற்பத்தி பதப்படுத்தல், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இலங்கை முதலீட்டாளர்களுக்கு பாக்கிஸ்தானில் அபரிமிதமான சாத்தியங்கள் இருப்பதாக நான் நம்புகிறேன்.

இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் குறுகிய தூரத்தின் காரணமாக, நிச்சயம் இதை இன்னும் நாம் உயரமான தளங்களுக்கு விரிவாக்க முடியும்.

கேள்வி: சார்க் அமைப்பு உருவானபோது, ​​இப்பிராந்தியம் ஒரு தனி அமைப்பாக இணைந்து செயல்படும் என்ற நம்பிக்கை அபிரிமிதமான எழுந்தது. ஆனால் தற்போது சார்க் செயலிழந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பிரச்சினை விடயத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் தமக்கிடையிலான கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கத் தவறியமை சார்க் அமைப்பின் நீடிப்பை பாதித்தது. இலங்கையின் இரு முக்கிய நண்பர்களான பாகிஸ்தானும் இந்தியாவும் தமது முரண்பாடுகளை விரைவில் தீர்த்துக் கொள்வார்களா?

பதில்: பாகிஸ்தானைப் பொறுத்த வரையில், காஷ்மீர் என்பது -அது தீர்க்கப்படும் வரை- ஒரு மிக முக்கியமான பிரச்சினையாகவேப இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் சூழலில் மட்டுமே பாகிஸ்தான்-இந்திய உறவில் முன்னேற்றம் காணப்படும். 1948 இல் தீர்மானித்தபடி, ஐ.நா. தனது முந்தைய தீர்மானத்தை எழுத்தில் மட்டுமல்ல தொணியிலும் நடைமுறைப்படுத்துவது அவ்வமைப்பின் நம்பத்தன்மைக்கான ஒரு சோதனையாகவே இருக்கும்.

இரண்டாவதாக, இலங்கையர் மிகவும் துடிப்பானவர்களாகவும், கல்வி அறிவு மிக்கவர்களாகவும் இருப்பதால், காஷ்மீர் உள்ளிட்ட பிராந்திய நிலைமைகள் மற்றும் இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் மேற்கொண்டு வரும் அட்டூழியங்கள் பற்றியும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் பற்றியும் நன்கு அறிந்திருப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.

அன்மையில் இந்திய தலைமை நீதிபதி டி. ஒய் சந்திரசந்த் தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து உறுப்பினர் அரசியலமைப்பு நீதியரசர்கள் குழு சட்டப்பிரிவு யு370 ரத்து செய்யப்பட்டதை ஆதரித்து தீர்ப்பளித்ததை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

பிரிவு 370 ஒரு தற்காலிக ஏற்பாடே என்றும், ஜம்மு காஷ்மீர்  மாநிலத்திற்கு இறையாண்மை இருக்கவில்லை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

உலகில் இதை யார்தான் ஏற்பர்? இது உண்மையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது. இதை ஒரு பாரதூரமான அநீதி மற்றும் நியாயமற்ற தீர்ப்பாகவே நாங்கள் கருதுகிறோம். எனவே, இந்த பிரச்சனையை உலகின் அனைத்து மன்றங்களிலும் நாம் தொடர்ந்து எழுப்புவோம்.

இந்தியாவின் எதிர்மறை மனப்பான்மையால், சார்க் போன்ற பயன்மிக்கதொரு அமைப்பின் பிரயோசனததை இப்பிராந்தியம் இழந்து விட்டமை உண்மையில் துரதிர்ஷ்டவசமானது.

கேள்வி:  பௌத்த காந்தார நாகரிகம் போன்றவைத் தவிர, நம்மிடையே இரு நாடுகளையும் இணைக்கும் கிரிக்கெட் பந்தமும் உள்ளது. இந்த இணைப்பின் மேலதிக சாத்தியம் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: கிரிக்கெட்டில் இந்த பகிரப்பட்ட ஆர்வத்தின் திறனைப் பற்றி நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். யாரும் இலங்கைக்கு கிரிக்கெட் விளையாட வராத கால கட்த்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

அதே போன்று இலங்கை அணியும் எங்களுடைய இக்கட்டான காலகட்டத்தில் பாகிஸ்தானுக்குச் சென்று ஆதரவு அளித்தது. எனவே, இது முற்றிலும் ஒரு தனித்துவமான பந்தமாகும்.

இருப்பினும், எங்கள் உறவு உண்மையில் இதைத் தாண்டியுள்ளது, இது அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு தலைமைத்துவங்களின்  பரஸ்பர விஜயங்கள் மூலம் தெளிவான்கிறது.

கேள்வி:  நீங்கள் நம்மை விட்டுப் பிரியும் தருணத்தில் இலங்கை மக்களுக்கு தரும் விசேட செய்தி என்ன?

பதில்: சமீபத்திய பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையரின் அற்புதமான மன உறுதியை நான் கண்டேன்.

இலங்கையர் பொறுமை மிக்கவர்களாக இருந்ததால், நாடு முகங்கொடுத்து வந்த பல பொருளாதார பிரச்சினைகளை ஏறக்குறைய வென்றுள்ளனர்.

புன்னகைத்துக் கொண்டே இருங்கள் மற்றும் உங்களால் முடிந்த அளவு இந்த சிறந்த நாட்டிற்கு தொடர்ந்து பங்களிப்பு செய்யுங்கள். பாகிஸ்தான் எப்போதும் உங்களுடைய உண்மையான நண்பனாக நிற்கும் என்பதையும் நான் உறுதியளிக்கிறேன்.

Popular

More like this
Related

இன்றைய நாணய மாற்றுவிகிதம்

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல்...

சிலந்தி,தேள் மாதிரிகளை கடத்த முயன்ற அமெரிக்க அருங்காட்சியகக் கண்காணிப்பாளர் இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது !

துருக்கி இஸ்தான்புல்லில் நூற்றுக்கணக்கான விஷ சிலந்திகள் மற்றும் தேள்களை நாட்டிலிருந்து கடத்த...

இம்முறை தனியாக இரண்டாவது நக்பாவை எதிர்கொள்கின்றோம்: பலஸ்தீன மக்கள் கருத்து

நாங்கள் இரண்டாவது நக்பாவை எதிர்நோக்கியுள்ளோம் என தெரிவிக்கும் பலஸ்தீனியர்கள்  இம்முறை தனித்துவிடப்பட்டுள்ளதாகவும்...

இந்து – முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன்: இந்திய பிரதமர் மோடி

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டத்...