இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஐக்கிய நாடுகளின் FAO பிரதிநிதிகள்!

Date:

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிராந்திய அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள அதன் ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டின் (APRC) 37 ஆவது அமர்வின் ஏற்பாடு நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது.

குறித்த மாநாடானது பெப்ரவரி 19 – 22 முதல் கொழும்பில் நடைபெறவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

மாநாட்டின் அமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள FAO வின் பிராந்திய அலுவலகத்தின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 46 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு உணவு மற்றும் விவசாயம் தொடர்பான சவால்கள் மற்றும் முன்னுரிமைகள் குறித்து விவாதிக்க, பிராந்திய ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும்.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...