இலங்கை வீட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்காக கட்டணம் குறைப்பு: சவுதி அரேபியா அறிவிப்பு!

Date:

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்போது அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு சவூதி அரேபியா தீர்மானித்துள்ளது.

பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகண்டா, கென்யா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்த பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சினால் இந்த கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தன்படி, இலங்கையில் இருந்து வீட்டு பணியாளர் ஒருவரை ஆட்சேர்ப்பு செய்யும் போது அறவிடப்படும் கட்டணத்தை 15 ஆயிரம் சவூதி அரேபிய ரியாலில் இருந்து 13 ஆயிரம்  ரியாலாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சேர்ப்புத்துறையில் ஏற்பட்டுவரும் செலவுகளுக்கு ஏற்ப இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...