இலங்கையில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புக்களை ஒரே குடையின் கீழ் இணைப்பதற்கான இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் அல்-ஹாஜ் எம்.எச். முஹம்மதின் புதல்வரும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தின் தலைவருமான அல்-ஹாஜ் ஹுஸைன் முஹம்மத், மற்றும் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் மர்ஹும் அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யித் அலவி மௌலானாவின் புதல்வரும் அகில இலங்கை சூபி தரீக்காக்களின் உயர்பீடத்தின் (SCOT) தலைவருமான அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யித் நகீப் மௌலானா ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக இஸ்லாமிய ஐக்கியப் பேரவை அறிவித்துள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவையின் நிர்வாக அதிகாரி பியாஸ் முஹம்மத் தெரிவித்தார்.
இஸ்லாமிய ஐக்கியப் பேரவையில் இலங்கையில் இயங்குகின்ற 29 இஸ்லாமிய அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.