குஜராத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி!!

Date:

இந்தியாவின், குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில், படகில் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்கள் 12 பேரும், 2 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

படகில் தனியார் பாடசாலை ஒன்றின் 27 மாணவர்கள் பயணம் செய்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களில் யாரும் பாதுகாப்பு ஜெக்கெட் அணியவில்லை என்றும் கூறப்படுகின்றது.

படகு விபத்தையடுத்து தீயணைப்பு படையினர் ஏரியில் மூழ்கிய மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

சுற்றுலா சென்ற மாணவர் குழுவொன்றை ஏற்றிச் சென்ற படகொன்றே நேற்று (18) பிற்பகல் இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதுவரை 7 மாணவர்களை தீயணைப்புப் படையினர் உயிருடன் மீட்டுள்ள நிலையில், காணாமல் போன ஏனையவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித...

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...