கெஹேலிய ரம்புக்வெலவின் உத்தியோகப்பூர்வ இல்லம் முன் வைக்கப்பட்ட மலர் வளையம்!

Date:

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெலவின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு முன் நேற்று  மலர் வளையம் வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் பொலிஸாரினால் குறித்த மலர் வளையம் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியர் சமல் சஞ்ஜீவ மற்றும் சமூக செயற்பாட்டாளர் சஞ்ஜய மாவத்த உள்ளிட்ட சிலர், கெஹேலிய ரம்புக்வெலவின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு முன்னால் மலர் வளையமொன்றை வைத்து சென்றுள்ளனர்.

எனினும் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் குறித்த மலர் வளையத்தை அங்கிருந்து அகற்றி உள்ளளர்.

இதேவேளை  கடந்த வருடத்தில் சுகாதாரத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெலவினால் முன்னெடுக்கப்பட்ட மோசடிகள் தொடர்பில் சாட்சியை முன்வைப்பதற்காக கலந்துரையாடலுக்கு நேரம் ஒதுக்கி கொடுக்குமாறு உத்தியோகப்பூர்வ கடிதமொன்றை சமர்ப்பித்திருந்தோம்.

ஆனால், ஹெஹேலிய ரம்புக்வெல சட்டத்தரணிகளினூடாக அந்த விசாரணைகளில் இருந்து விலகுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார் என வைத்தியர் சமல் சஞ்சீவ ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...