சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 15ஆவது ஆண்டு நினைவுதினம்: சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிவிப்பு

Date:

மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு  தண்டனை வழங்கப்படுவதை நிறுத்துமாறும், அவரது படுகொலைக்கு காரணமானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறும் சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் குழு ‘X’ பதிவில், அவரது படுகொலைக்கு காரணமானவர்கள் பொறுப்புக்கூறப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

“15 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை உள்நாட்டில் தீர்த்து வைப்பதாக இலங்கை அரசு உறுதியளித்த போதிலும், விசாரணை ஸ்தம்பித்துள்ளது.

லசந்தவின் கொலைக்கான பொறுப்புக்கூறலுக்காக தொடர்ந்து போராடி வரும் அவரது குடும்பத்தினருக்கு இன்றுவரை நீதி கிடைக்காமல் போய்விட்டது” என குழு மேலும் தெரிவித்துள்ளது.

மறைந்த இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 15ஆவது நினைவு தினம் இன்று (ஜனவரி 08) அனுஸ்டிக்கப்படும் நிலையில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை 09.00 மணிக்கு பொரளை மயானத்தில் லசந்த விக்கிரமதுங்கவின் கல்லறைக்கு அருகில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

அவரது குடும்பத்தாருடன் இணைந்து ஊடகவியலாளர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

லசந்த விக்ரமதுங்க, இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் பத்திரிகை ஆசிரியரும், வழக்கறிஞரும் ஆவார்.

இவர் கொழும்பில் இருந்து வெளியாகும் த சண்டே லீடர் என்ற ஆங்கில ஞாயிறு இதழ், மற்றும் புதன் தோறும் வெளிவரும் “மோர்ணிங் லீடர்” வார ஏட்டின் ஆசிரியராகவும் இருந்து வந்தார்.

இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...