ஜப்பானிய கராத்தே நிபுணர் ஹன்ஷி கெனிச்சி புஃகாமிசு அவர்களின் சர்வதேச கராத்தே பயிற்சிநெறி!

Date:

ஜப்பானிய கராத்தே நிபுணர் ஹன்ஷி கெனிச்சி புஃகாமிசு அவர்களின் சர்வதேச கராத்தே பயிற்சிநெறி கடந்தவாரம் ஓட்டமாவடியில் நடைபெற்றது.

SKMS கராத்தே கழகத்தின் முதல்வர் சிஹான் MS.வஹாப்தீன் மற்றும் Universal Shotokan Karate Union (USKU -EP) கராத்தே சங்கத்தின் கறுப்புபட்டி மாணவர்கள் குழாமினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்விற்கு ஜப்பான் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த கராத்தே நிபுணர் ஹன்ஷி கெனிச்சி புஃகாமிசு அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சிநெறியை வழங்கியதோடு சர்வதேச சான்றிதழ்களையும் மாணவர்களுக்கு வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி,வாழைச்சேனை, செம்மண்னோடை,மட்டக்களப்பு,நிந்தவூர் மற்றும் பொத்துவில் பிரதேசங்களிலிருந்து மிகவும் ஆர்வத்துடன் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னால் கிழக்கு மாகாண ஆளுநரான கலாநிதி MLM.ஹிஸ்புல்லாஹ்வும் சிறப்பு அதிதிகளாக கல்குடா தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான ஹபீப் றிபான், அல்கிம்மா நிறுவனப் பணிப்பாளர் அஷ்ஷெஹ் MS.ஹாறூன் (ஸஹ்வி) ,USKU கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் ZA.ரவூப், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் MM.ஹனீபா, அக்கீல் அவசர சேவை பிரிவின் தலைவர் MAC நியாஸ் ஹாஜி, VSKA கராத்தே சங்கத்தின் போதனாசிரியர் விஜயகுமார், JKMO சங்கத்தின் சிரேஷ்ட ஆசிரியர் சில்வா மற்றும் JKF கராத்தே சங்கத்தின் கிழக்குமாகாண போதனாசிரியர் புஷ்பராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வின் இறுதி அம்சமாக தேசிய, மாகாண கராத்தே போட்டிகளில் வெற்றீயீட்டிய வீரர்களை கௌரவப்படுத்தியதோடு அதிதிகள் மற்றும் SKMS கறுப்புப் பட்டி ஆசிரியர்களுக்கான நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பல தசாப்தங்களாக சோட்டோக்கன் கராத்தே விளையாட்டு ஓட்டமாவடி பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற ஒன்றாக திகழ்வதோடு அதனை கௌரவிக்கும் நிகழ்வாக ஜப்பானிய கராத்தே நிபுணரை அழைத்து வந்து இந்நிகழ்வினை SKMS. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திறன்பட நிறைவு செய்திருந்தனர்.

-சுலைமான் நுஸ்ரான்

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...