டெலிகொம்மின் தலைவர் ரியாஸ் மிஹிலார் உட்பட ஏழு பணிப்பாளர்கள் இராஜினாமா!

Date:

தலைவர் உட்பட ஆறு பணிப்பாளர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்ததாக ஸ்ரீலங்கா டெலிகொம் நேற்று அறிவித்தது.

நிறைவேற்றுத் தரம் அல்லாத சுயாதீனத் தலைவராகச் செயற்பட்ட ரியாஸ் மிஹிலார், ஜனாதிபதி கோத்தாபயவின் ஆட்சியில் தலைவராக நியமிக்கப்பட்ட 120,000 பங்குகளை வைத்திருக்கும் ரொஹான் பெர்ணான்டோ, லலித் செனவிரத்ன, ரஞ்சித் ரூபசி்ங்ஹ, ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன், திறைசேரி பிரதிநிதி கேஏ விமலேந்திரராஜ் ஆகியோரே இராஜினாமா செய்தனர்.

SLT இன் துணை நிறுவனமான eChanneling Plc இன் தலைவர் பதவியிலிருந்தும் ரொஹான் பெர்னாண்டோ ராஜினாமா செய்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனவரி 24 அன்று SLT யை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறுசீரமைக்குமாறு திறைசேரி செயலாளருக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்தே இவர்களின் இராஜினாமா இடம் பெற்றுள்ளது.

இவர்களுக்குப் பதிலாக கே.டி.டி.டி. அரந்தர (தலைவர்), டாக்டர் கே.ஏ.எஸ். கீரகல, தினேஷ் விதானபத்திரன, பேராசிரியர் கே.எம். லியனகே, கலாநிதி டி.எம்.ஐ.எஸ். தசநாயக்க மற்றும் சத்துர மொஹொட்டிகெதர ஆகியோர் அரச தரப்பினராக முன்மொழியப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...