நடிகர் விஜயின் இலங்கை வருகை சுற்றுலாத்துறையை இலவசமாக விளம்பரமடைய வழிவகுக்கும்: ஹரின் பெர்ணான்டோ

Date:

தென்னிந்திய நடிகர் தளபதி விஜய் இலங்கை வருவதன் ஊடாக பல மில்லியன் கணக்கான மக்களுக்கு இலங்கையின் சுற்றுலாத்துறை குறித்து விளம்பரப்படுத்த முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க விசேட குழுவொன்றை நியமித்து தென்னிந்திய மற்றும் பொலிவூட் திரைப்படங்களுக்கு இலங்கையில் படிப்பிடிப்புகளை நடத்துமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

எதிர்காலத்தில் பல இந்திய நடிகர்கள் இலங்கைக்கு வர உள்ளனர். குறிப்பாக தளபதி விஜய், சல்மான் கான் உட்பட பலர் படப்பிடிப்புகளை நடத்த வருகைத்தர உள்ளனர். இவர்கள் தமது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை இட்டால் அது பல மில்லியன் கணக்கான மக்களை சென்றடைகிறது.

பிரபுதேவா உட்பட பலர் இலங்கைக்கு வந்துச் சென்றுள்ளனர். இலங்கையின் சுற்றுலாத்துறை பல்வேறு வழிகளில் எதிர்காலத்தில் ஊக்கமடையும். அதேபோன்று படிப்பிடிப்புகளை நடத்துவதற்கு இலகுவான அனுமதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.” எனவும் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கூறியுள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...