நீண்டகாலமாக இழுத்தடிப்பு செய்யப்படும் மௌலவி ஆசிரியர் நியமனங்கள்: முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தலையீட வேண்டும், அஷ்ஷைக், அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் கோரிக்கை

Date:

140வது வருடத்தை பூர்த்தி செய்கின்ற இலங்கையின் பழமை வாய்ந்த அரபுக் கல்லூரியான,புத்தளம் நகரில் அமையப் பெற்றிருக்கின்ற காஸிமிய்யா அரபுக்கல்லூரியில் இருந்து 2024ம் ஆண்டிற்காக சவூதி அரேபியாவில் உள்ள மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள 08 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய அக்கல்லூரியின் முதல்வரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.

புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ஸில்ஸிலதுல் காஸிமிய்யீன் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விசேட உரையாற்றிய அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூந் ஆலிம் மேலும் உரையாற்றுகையில்:

காஸிமிய்யா அரபுக்கல்லூரி 140 வருடங்களைப் பூர்த்தி செய்து இலங்கையில் பழமை வாய்ந்த அரபுக்கல்லூரி என்ற பெயரை நாட்டில் பதித்துள்ளது. இந்த நீண்ட வரலாறு அதிகமானோருக்கு மறந்திருக்கிறது.

இருந்தாலும் இந்த செய்தியை கேள்விப்பட்ட பலரும் வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொண்டார்கள்.

உண்மையிலேயே காஸிமிய்யா அரபுக்கல்லூரியின் பாடத்திட்டம் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்டதன் காரணமாகத்தான் இக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்தும் அங்கு உயர்கல்வி கற்பத்தற்காக தெரிவு செய்யப்படுகிறார்கள்.
அந்த வகையில் இவ்வருடமும் 08 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டமை இக்கல்லூரிக்கு கிடைத்த பெருமை.

மேலும் இக் கல்லூரியின் மாணவர்கள் என்ற வகையில் இங்கிருந்து உயர்க்கல்விக்காக செல்கின்ற மாணவரகள் கல்லூரியின் பௌதீக வளங்களை முன்னேற்றுவதற்காக உழைப்பதற்கு அப்பால் தங்களை ஆளுமை மிக்க அறிஞர்களாக மிகத் தெளிவான சிந்தனை உடையவர்களாக தங்களை அமைத்துக் கொள்வதற்காக அவர்கள் உயர்க் கல்வி கற்கின்ற காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறப்பான இவ் வைபவத்தில் முன்னாள் மகாண சபை உறுப்பினர் எம்.எச். எம். நியாஸ், எக்ஸலன் பாடசாலையின் அதிபர் எச். அஜ்மல் வாமி நிறுவனத்தின் இலங்கைக்கான ஸ்தாபக பணிப்பாளராக இருந்து கனடாவில் வசித்து வருகின்ற அஷ்ஷெய்க், ஹிப்சுர் ரஹ்மான் புஹாரி, பஹன மீடியாவின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் முஜீப் ஸாலிஹ் ,கொழும்பு அமேஸன் கல்லூரியின் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார், மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தின் அதிகாரி அஷ்ஷெய்ஹ் றிஸ்மி , காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முகாமைத்துவ சபையின் தலைவர் எஸ்.ஆர் முஸம்மில் மற்றும் அதன் செயலாளர் சட்டத்தரணி, எம்.எச் பஸ்லுர் ரஹ்மான், முகாமைத்துவ சபையின் பிரதிச் செயலாளர் அஷ்ஷெய்க் பாரிஸ் மதனி உட்பட முகாமைத்துவ சபையின் உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் என பல்வேறு பிரமுகர்கள் இந்த சிற ப்பான நிகழ்விலே கலந்து கொண்டார்கள்.

நிகழ்வின் இறுதியில் மதீனா பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிச் செல்கின்ற மாணவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அண்மையில் காலமான இஸ்லாஹிய்யாவின் அதிபர், அஷ்,முனீர் அவர்களின் பணிகள், பங்களிப்புக்கள் பற்றியும் இவ்வைபவத்தில் நினைவு கூறப் பட்டமை குறி்ப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...