யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய இளவரசி: யாழ்.நூலகத்திற்கும் விஜயம்

Date:

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வருகை தந்த இளவரசி உள்ளிட்ட குழுவினரை வடமாகாண ஆளுநர் வரவேற்றிருந்தார்.
தொடர்ந்து யாழ்.பொது நூலகத்திற்கு சென்ற இளவரசி உள்ளிட்டவர்களை யாழ்.மாநகர சபை ஆணையாளர் , நூலகர் , நூலக உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மற்றும் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் இலங்கை வந்துனர்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் பிரித்தானிய இளவரசி கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...